ஈழத்தின் எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் மறைவு
ஈழத்தின் ‘மூத்த’ எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்கள் மறைந்துவிட்டார். அன்னாருக்கு அஞ்சலி…
போர்க்காலத்தில் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் அவர். விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த ஊடகங்களில் அவரது பங்களிப்புகள் கணிசமாக இருந்தன.
‘விடுதலை அரசியல்’ சார்ந்த விமர்சனபூர்வமான உரையாடல்கள், அவருக்கோ அவருடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றிய நண்பர் திரு. தவபாலன் போன்றவர்களுக்கோ அதிகம் உவப்பானவையாக அக் காலத்தில் இருந்ததில்லை. கலை சார் அணுகுமுறைகளில் வேறுபாடுகள் இருந்தன.
அவ்வப்போது கருத்து ரீதியில் முரண்பட நேர்கையிலும், நட்பு ரீதியில் அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தது.
அவரது ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ என்னும் நூல் அண்மையில் வெளியானது. அது கிடைத்ததும் வாசிக்க வேண்டும்.
2024-12-29
அமரதாஸ்