A Year of School – இத்தாலியத் திரைப்படம்

இத்தாலிய இயக்குநர் லவுரா சமானி (Laura Samani) இயக்கிய UN ANNO DI SCUOLA (A Year of School) என்னும் திரைப்படத்தை, சூரிச் திரைப்பட விழாவில் 2025-10-04 அன்று பார்க்க முடிந்தது.
Fred என்னும் பெயர் கொண்ட, துடித்தனம் நிறைந்த சுவீடிஸ் (Swedich) பெண் ஒருவர், இத்தாலியில் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியிலே சேர்ந்து படிக்கிறாள். 18 ஆவது வயதில், ஆண் மாணவர்களை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய சவாலான பாடசாலைச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அவள் தனது அடையாளத்தை வடிவமைக்கவும் நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் முனைகிறாள்.
அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் பெண், பாத்திர வார்ப்புக்கு அமைவாக நட்பு, காதல், காமம் போன்றவற்றை இயல்பாக உடல்மொழியில் வெளிப்படுத்துகிறாள்.
இந்திய மொழிகளிலே உருவாக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் வலிந்து புனையப்படும் தேய்வழக்கு (stereotype), இந்த இத்தாலியத் திரைப்படத்தில் ஆங்காங்கு தென்படாமல் இல்லை. ஆனால், பள்ளிக்காலத்திலே தோன்றக்கூடிய காதல் மற்றும் பாலியல் சார் நடத்தைகளை, பாசாங்குத்தனம் இல்லாமல் இயல்பாகப் பதிவுசெய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.



இத்தாலிய இயக்குநர் லவுரா சமானி (Laura Samani) மற்றும் அமரதாஸ்
2025-10-10
அமரதாஸ்
