வெளிவருகிறது ‘அந்தோணி’ திரைப்படம்

சுவிஸ் நாட்டில் வசிக்கும் நண்பர் ரமணன் அவர்களது தயாரிப்பில் உருவான ‘அந்தோணி’ என்னும் திரைப்படம், 2026-03-13 தொடக்கம் தமிழ், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் திரையிடப்படவுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சுவிஸ் நாட்டிலே பல்வேறு திரையரங்குகளில் இத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட ஆர்வலர்கள், ஈழ சினமா வளர்ச்சிக்குப் பங்களிக்க விரும்புகிறவர்கள் ஏதாவது ஒரு திரையரங்கில் இதனைப் பார்க்க முடியும்.

திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்!

அமரதாஸ்
2026-03-10