Memory of Princess Mumbi & Father

சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் வசிக்கும் கென்ய இளைஞர் டேமியன் ஹவுசர் (Damian Hauser) இயக்கிய Memory of Princess Mumbi என்னும் திரைப்படத்தை, சூரிச் திரைப்பட விழாவில் 2025-10-04 அன்று பார்க்க முடிந்தது.
2093 ஆம் ஆண்டில், பண்டைக்கால இராச்சியங்களை மீளமைத்த ஒரு போரின் விளைவுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் உமாட்டா என்னும் இடத்துக்குப் பயணிக்கும் குவே என்பவர், அங்கு மும்பி என்பவரைச் சந்திக்கிறார்.
இது ஒரு பரிசோதனைத் திரைப்படம். (Experimental Film) செயற்கை நுண்ணறிவு (AI) மூலம், பல காட்சிகளை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
திரையிடல் முடிந்த பின்னர், சூரிச் திரைப்பட விழாவிற்கான ‘விமர்சகர் நடுவர் விருது’ (ZFF Critics’ Jury Award) இத் திரைப்படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது.



சுவிஸ் – கென்ய இயக்குநர் டேமியன் ஹவுசர் (Damian Hauser) மற்றும் அமரதாஸ்
திரைப்பட விழாவில், புனைவுத் திரைப்படப் போட்டிப் பிரிவில் (Feature Film Competition) ‘வெற்றி’ பெற்ற FATHER என்னும் திரைப்படத்தினை, 2025-10-05 அன்று சிறப்புத் திரையிடலின்போது பார்க்க முடிந்தது. செக்-ஸ்லோவாக் இயக்குநரும் நடிகருமான Tereza Nvotova என்பவர் இயக்கியது.

அமரதாஸ் 2025-10-10
