சிங்கள ஊடகர் விக்டர் ஐவன் மறைவு
இலங்கையின் ‘மூத்த’ சிங்கள ஊடகர் விக்டர் ஐவன் அவர்கள் மறைந்துவிட்டார்.
மாற்று அரசியற் பார்வைகளோடு ‘ராவய’ என்னும் சஞ்சிகையினை ஆரம்பித்து, பின்னர் வாரந்தப் பத்திரிகையாக அதனை வளர்த்தெடுத்தவர். இலங்கையின் சுயாதீன ஊடக இயக்கத்திற்கு வலுச்சேர்த்தவர்களில் முக்கியமானவர்.
இலங்கை நீதித்துறையின் போதாமைகளை அம்பலப்படுத்தும் வகையில், ‘Silence in the Courts’ என்னும் புனைவுசாராத் திரைப்படம் ஒன்று பிரசன்ன விதானகே அவர்களால் உருவாக்கப்பட்டது. அதில் விக்டர் ஐவன் முக்கியமான பாத்திரமாகத் தோன்றிப் பேசியிருக்கிறார்.
அன்னாருக்கு அஞ்சலி…
2025-01-19
அமரதாஸ்