Bookshelf

Es gibt keinen Weg zum Frieden, denn Frieden ist der Weg.
There is no way to peace, because peace is the way.
அமைதிக்கு வழி இல்லை, ஏனெனில் அமைதியே வழி.

//நீ யார் உனக்கு நான் ஒரு படகு தருவதற்கு, நீங்கள் யார் அதைத் தர மறுப்பதற்கு, நான் இந்த நாட்டின் அரசன், இந்த நாட்டில் இருக்கும் படகுகள் அனைத்தும் எனக்குச் சொந்தமானது, அவை உங்களுக்குச் சொந்தம் என்பதை விட, நீங்கள் அவைகளுக்குச் சொந்தம், என்ன சொல்கிறாய் என்று அரசன் கலங்கிப்போய்க் கேட்டான், அதாவது, அவை இல்லாமல் நீங்கள் ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் இல்லாவிட்டாலும் அவை கடலில் பயணம் செய்ய முடியும்,//

//மாரி எனக்கு ஒரு சிறிய விளையாட்டு சொல்லிக்கொடுத்தாள். பொங்கிவரும் அலையை நீந்திக்கொண்டே வாயால் உறிஞ்ச வேண்டும். அந்த நுரையை வாயில் அடக்கிக்கொள்ள வேண்டும். பிறகு நீரில் மல்லாந்து படுத்தவாறு ஆகாயத்தை நோக்கி நுரையைப் பீச்சியடிக்க வேண்டும். அப்போது அது நுரையினாலான வலைத் துணி போன்று காற்றில் கலக்கும், அல்லது வெதுவெதுப்பான பூமாரிபோல் முகத்தில் பொழியும். ஆனால், இந்த விளையாட்டில் வெகு விரைவிலேயே, உப்பு நீர் என் வாயில் எரிச்சலைத் தந்தது. அப்போது மாரி வந்து நீருக்கடியில் என் உடலோடு ஒட்டிக்கொண்டாள். வாயை என் வாயுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் நாக்கு என் உதடுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. அப்படியே அலைகளினூடே சற்று நேரம் கட்டிப் புரண்டோம்.//

//சேர்ந்து நீந்தலாமா என்று மாரி என்னிடம் கேட்டாள். நான் அவளுக்குப் பின்னால் அவள் இடுப்பைப் பிடித்தவாறிருக்க, அவள் கைகளைத் துடுப்பாக்கி முன்னேற, நான் பின்னால் கால்களை உதைத்தவாறு அவள் முன்னோக்கிச் செல்ல உதவினேன்.//