Living Moments: Photographs of Amarathaas – வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள்
Living Moments: Photographs of Amarathaas – வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள்
அமரதாஸ் அவர்களின் முதலாவது ஒளிப்பட நூல் ‘Living Moments: Photographs of Amarathaas – வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள்’ என்னும் பெயரில் 2006-06-24 அன்று இலங்கையின் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.
அந்த ஒளிப்பட நூலானது, A4 அளவில் 350 வரையிலான பக்கங்களைக் கொண்டிருந்தது. அது Wide Vision Studio வெளியீடு ஆகும். அதில் இடம்பெற்றிருந்த போர்க்கால ஒளிப்படங்கள் பலவும், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் அழிவடைந்துவிட்டன. அந்த நூலின் ஒளிப்படங்கள், பெரும்பாலும் ‘பிலிம்’ கமெராக்களால் உருவாக்கப்பட்டவை.
அமரதாஸ் அவர்களின் முதலாவது ஒளிப்படக்காட்சி, ‘Living Moments – வாழும் கணங்கள்’ என்னும் பெயரில் 2006-06-25 தொடக்கம் ஐந்து நாட்கள் கிளிநொச்சியில் நிகழ்த்தப்பட்டது.