மாபெரும் ஆவணக்காட்சி நிகழ்வும் கார்ட்டூன் நூல் வெளியீட்டு நிகழ்வும்

எதிர்வரும் 13.10.2019 அன்று, ஜேர்மனியில் (முன்சென்) அன்ரன் ஜோசப் அவர்களது ‘ஆவணகம்’ அமைப்பின் 50 ஆவது ஆவணக்காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஓவியர் தர்மதாஸ் (செல்வன்) அவர்களது ‘காலவரை’ என்னும் கார்ட்டூன் நூல் வெளியிடப்பட இருக்கிறது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள கார்ட்டூன்கள், பல்வேறு ஊடகங்களில் பிரசுரமாகியவை.

தாசீசியஸ் அவர்களைப் பற்றிய ‘நாடகர் – ஊடகர் – ஏடகர்’ என்னும் நூல் (பவள விழா மலர் 2016) உட்பட, வேறு சில நூல்களின் அறிமுக நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம் – Willi-Graf-Gymnasium Borschtallee 26, 80804 München, Germany