மாபெரும் ஆவணக்காட்சி நிகழ்வு

அன்ரன் ஜோசப் அவர்களது ‘ஆவணகம்’ அமைப்பின் 50 ஆவது ஆவணக்காட்சி நிகழ்வு, பெருந்தொகையான மக்கள் பங்கேற்புடன் கடந்த 13.10.2019 அன்று ஜேர்மனியில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். ஓவியர் தர்மதாஸ் (செல்வன்) அவர்களது ‘காலவரை’ என்னும் கார்ட்டூன் நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன், திரு. விமல் சொக்கநாதன் எழுதிய ‘விமலின் பக்கங்கள்’, திரு. தாசீசியஸ் பற்றிய ‘நாடகர் – ஊடகர் – ஏடகர்’, திருமதி. ரூபவதி நடராஜா எழுதிய ‘யாழ்ப்பாணப் பொது நூலகம் – அன்றும் இன்றும்’ ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வுகளும் வேறு சில அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றன.