ஜெர்மன் நாட்டிலே கார்ட்டூன் நூல் வெளியீடு
ஓவியர் தர்மதாஸ் (செல்வன்) அவர்களது ‘காலவரை’ என்னும் கார்ட்டூன் நூல் வெளியீட்டு நிகழ்வு, ‘ஆவணகம்’ அமைப்பின் ஆவணக்காட்சி நிகழ்வின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் 13.10.2019 அன்று நடைபெற்றது. கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில், கவிஞர் சேரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
முதற்பிரதியை, யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு. தா. சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார். திரு. விமல் சொக்கநாதன், திரு. எரிக் சொல்கெய்ம், திரு. தாசீசியஸ், திரு. அன்ரன் பொன்ராஜா, திருமதி. ரூபவதி நடராஜா ஆகியோர் சிறப்புப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். ‘காலவரை’ என்னும் கார்ட்டூன் நூலில் இடம்பெற்றுள்ள கார்ட்டூன்கள், பல்வேறு ஊடகங்களிலே பிரசுரமாகியவை.