யாழ். பல்கலைக்கழகத்தில் ஒளிப்படக்காட்சி    

இலங்கை உள்நாட்டுப் போர்க்காலத்திலே கலைஞரும் சுயாதீன ஊடகருமான அமரதாஸ் அவர்களினால் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள், யாழ். பல்கலைக்கழகத்திலே 2020-10-16 அன்று காட்சிப்படுத்தப்பட்டன.

‘போர்க்கால வாழ்வியலில் ஓர் அத்தியாயம்’ (A CHAPTER IN WARTIME LIFE : PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES) என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட ஒளிப்படக்காட்சியை, ‘வைட் விசன் ஸ்ரூடியோ’ ஆதரவுடன் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இறுதியாண்டு மாணவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

இலங்கையின் இறுதிப்போர் நடந்து முடிந்த மாத்தளன், வலையர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுயாதீன ஊடகராகச் செயற்பட்ட அமரதாஸ், போர்க்கால வாழ்வியலையும் அவலங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான ஒளிப்படங்கள் பலவற்றை உருவாக்கியிருப்பதுடன் அவற்றைப் பல்வேறு வழிமுறைகளில் சர்வதேசமயப்படுத்தியிருக்கிறார். உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒளிப்படக்காட்சி நிகழ்வுகளில் இடம்பெற்றிருந்த அத்தகைய ஒளிப்படங்கள் பலவும் மேற்படி நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

‘கொரோனா’ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்படி நிகழ்வு நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.