Manike Mage Hithe – මැණිකේ මගේ හිතේ
‘மெனிக்கே மகே ஹித்தே…’ என்று தொடங்கும் ஒரு சிங்களப் பாடல், அதிக கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. மெலிதாகக் கரகரக்கும் குரலெடுத்து சுந்தரச் சிங்களத்தில் யோகானி சரளமாகப் பாடும் விதம் ரசனைக்குரியது. ரா வும் மா வும் கலக்கும் இடம் (ஆண் குரலின் முடிவில் யோகானியில் குரல் கலக்கும் இடம்), அலாதியானது. (1:26) அந்த இடத்தில், இசைக்கோலங்களும் குரல்களும் நுட்பமாகக் கலந்திருக்கின்றன. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றின் அழகியல் நுட்பங்களை அந்த இடத்தில் அவதானித்து ரசிக்க முடிகிறது. ‘யார் இந்த தேவதை…’ ‘ரவுடி பேபி…’ போன்ற தமிழ்ப் பாடல்களை இப் பாடல் நினைவுபடுத்துகிறது.
2021-08-21