சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஒளிப்பட நூல் நிகழ்வு
நீண்டகாலமாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வு, 2022-10-22 அன்று லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நூலின் சுவிஸ் நாட்டிற்கான வெளியீடு அல்லது அறிமுக நிகழ்வு, 2022-11-12 அன்று 15.00 மணியளவில் Gessnerallee 8, 8001 Zurich என்னும் முகவரியில் அமைந்துள்ள House of anti-racism மண்டபத்தில் நடைபெறும்.
ஊடகர்கள், எழுத்தாளர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்கள், மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் ஒளிப்பட நூல் சார் நிகழ்விற் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள், இந்த ஒளிப்படப் பெரு நூலை நிகழ்வு அரங்கில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொடிய போரில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த மிக முக்கியமான முன்னெடுப்பாக அமைந்திருக்கும் இந்த ஒளிப்படப் பெரு நூலைப் பெற்றுக்கொள்ளவும் பரவலாக்கவும் வெவ்வேறு தளங்களை நோக்கி எடுத்துச்செல்லவும் முன்வரக்கூடிய அனைவருக்கும் Wide Vision Studio சார்பில் ஆழ்ந்த நன்றியை முற்கூட்டியே முன்வைக்கிறோம்.
அனைத்து விதமான வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் பின்வைத்து, ஈழத்தமிழ் இனத்தின் தேவைகள் சார்ந்தும் ‘விடுதலை அரசியல்’ சார்ந்தும் புரிந்துணர்வுடன் கூடிய கண்ணியத்துடன் உரையாடி இணைந்து பயணிக்க முன்வருமாறு அனைத்துத் தரப்பினரையும் Wide Vision Studio சார்பில் வேண்டுகிறோம்.
குறிப்பு: எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மேற்படி மண்டபத்தில் Experi theater Zurich ஏற்பாட்டில் புத்தகக் காட்சியும் புத்தக விற்பனையும் நடைபெறும். (மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியாகும்.) அந்த மண்டபத்தின் ஒரு பகுதி நிகழ்வாக மேற்படி ஒளிப்பட நூல் சார்ந்த நிகழ்வு 12 ஆம் திகதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிப்பட நூல் சார்ந்த நிகழ்விற்கு வருகைதரக்கூடிய அன்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும், இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ‘புத்தகப் பண்பாடு’ சார்ந்த நிகழ்வுகளிற் பங்களிக்க வேண்டும் என்று Wide Vision Studio சார்பில் விரும்பி வேண்டுகிறோம். புத்தகப் பண்பாடு சிறக்கப் பங்களிப்போம்.