ஜேர்மனி நாட்டில் நடைபெற்ற ஒளிப்பட நூல் அறிமுக நிகழ்வு
ஜேர்மனி நாட்டின் பிராங்க்போர்ட் நகரில் 2024-08-24 அன்று THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
சுயாதீன ஊடகர், கலைஞர் அமரதாஸ் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
‘Tears of Tamils: A long journey from the war zones of Sri Lanka’ என்னும் புனைவுசாராத் திரைப்படத்தின் (Documentary film) குறுகிய பதிப்பு திரையிடப்பட்டது.
கலை ஆர்வலர், நடிகர் ரவின் திரு அவர்கள் கருத்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அமரதாஸ் அவர்களிடம் இருந்து ஒளிப்பட நூலின் பிரதிகளைப் பலரும் பெற்றுக்கொண்டனர்.
நூல் அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, ‘சாய் நச்சுரல்’ (Sai Natural Products) ஏற்பாட்டில் ‘ஆனந்தமும் ஆரோக்கியமும்’ என்னும் கருப்பொருளில் வேறு பல நிகழ்வுகளும் நடைபெற்றன.
மேற்படி ஒளிப்பட நூலின் வெளியீட்டு நிகழ்வுகள், இங்கிலாந்து மற்றும் சுவிஸ் நாடுகளில் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.