இரண்டு திரைக்கலைஞர்களின் மறைவு

இந்த மாதத்தில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு முக்கியமான திரைக்கலைஞர்கள் குறுகிய கால இடைவெளியில் மறைந்துவிட்டார்கள்.

2024-12-23 அன்று மறைந்த ஸ்யாம் பெனிகல், நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குநர்.

2024-12-25 அன்று மறைந்த எம். டி. வாசுதேவன், குறிப்பிடத்தகுந்த நாவல்களையும் திரைக்கதைகளையும் எழுதியவர்; திரைப்பட இயக்குநராகவும் அறியப்பட்டவர். அவரது கதைகளில் இருந்து உருவாக்கப்பட்ட ‘மனோரதங்கள்’ என்னும் இணையத் திரைத்தொடரை (Anthology webseries) அண்மையிற் பார்த்திருந்தேன். மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த கலைஞர்களாகத் தற்காலத்தில் இயங்கும் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில், பார்வதி, அபர்ணா உட்படப் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். கமல்ஹாசன், எடுத்துரைப்பாளராகப் பங்களித்திருக்கிறார்.

சினமா உலகிலும் இலக்கியப் பிரதிகளிலும் வெவ்வேறு காலப் பின்னணிகளில் விதவிதமான பாத்திரங்களை எம். டி. வாசுதேவன் உருவாக்கியிருக்கிறார்.

மறைந்த ஸ்யாம் பெனிகல், எம். டி. வாசுதேவன் ஆகிய இரு கலைஞர்களுக்கும் அஞ்சலி…

2024-12-26
அமரதாஸ்