மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைவு

மலையகத் தமிழ் எழுத்தாளராக நன்கு அறியப்பட்ட அந்தனி ஜீவா அவர்கள் மறைந்துவிட்டார். அன்னாருக்கு அஞ்சலி…

எப்போதும் எவரோடும் வாஞ்சையுடன் உரையாடக்கூடியவர் அந்தனி ஜீவா.

போர் ஓய்வுக்காலத்தில் (சமாதான காலம்) எழுத்தாளர் திரு. சாரல் நாடன் உள்ளிட்ட மலையக எழுத்தாளர்களின் குழுவைக் கிளிநொச்சிக்கு அழைத்துவந்திருந்தார். மலையகத்தில் இருந்து வன்னி ஊடாக யாழ்ப்பாணம் சென்ற அக் குழுவினரை, அப்போது கிளிநொச்சி நகரிற் சந்திக்க முடிந்தது.

அப்போது வன்னியில் இருந்த சில எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை அழகியற் கலாமன்ற வளாகத்தில் அக் குழுவினர் சந்தித்து உரையாடினர். அந்த நிகழ்வை நண்பர் திரு. விஜயசேகரன் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தேன். அந்தனி ஜீவா, அதனை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதி மகிழ்ந்திருந்தார். அவருடனான சந்திப்புகளும் உரையாடல்களும் மறக்க முடியாதவை.

2025-01-10
அமரதாஸ்