‘சீமானின் காதலுக்கு…’

 
ஒரு திரைப்படத்தில் (‘மைக்கேல் மதன காமராஜன்’) இளையராஜா அவர்கள் பாடிய “கதை கேளு கதை கேளு…” என்னும் பாடல் உள்ளது. அதில் ‘சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி…’ என்று தொடரும் வரிகள் (முதலாவது சரணம்), சீமான் அவர்களுக்கு எப்படியோ பொருந்திப்போகின்றன. சீமான் சார்ந்த சில வீடியோ காட்சிகளை அந்த வரிகளில் இணைத்து, யாரோ சமூக வலைத்தளங்களில் உலவ விட்டிருக்கிறார்கள். இன்று காலையில் ஒரு நண்பர் அதன் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார். தனிப்பட்ட தாக்குதலாகவோ அவதூறாகவோ மாறிவிடக்கூடாது என்பதால் அதைப் பொதுவெளியிற் பகிரவில்லை. அது சுவாரசியமாகச் செய்யப்பட்டிருந்ததால் அதனை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
 
விமர்சன வழியிற் பகடி செய்யப்படுவது தவறில்லை. அது ‘எல்லை’ மீறாமல் அவறூறாக இல்லாமல் சுவாரசியமாக இருப்பது முக்கியம்.
 
சீமானின் மோசடிகளை, அரசியல் ரீதியான குளறுபடிகளை, அடிப்படைவாதப் போக்கை அம்பலப்படுத்துவது அவசியமானது. அதற்கு, ஆதாரபூர்வமாகவும் நிதானமாகவும் போராடலாம். சீமானின் உருவப் பொம்மைகளை எரிப்பது, சமூக வலைத்தளங்களில் அவதூறு வகைப்பட்ட பதிவுகளைப் பரப்புவது போன்ற நடவடிக்கைகள் ஆரோக்கியமற்றவை.
 
அமரதாஸ்
2025-02-04