Photo exhibition at Indian University

In the M. F. Hussain Art Gallery of Jamia Millia University in Delhi, India, a series of photographs made by artist and journalist Amarathaas during the Sri Lankan civil war were exhibited under the title ‘MEMORIES OF TRAUMAS’.

This photo exhibition, organized by Rukshana, was held from 2025-03-10 to 2025-03-12.

Some of the photographs of photographer Dharmabalan Dilaksan were also included. It is noteworthy that the photographs made by Amarathaas reflected the war period and the photographs made by Dharmabalan Dilaksan reflected the post-war period.

இந்தியா நாட்டின் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் M. F. Hussain கலைக்கூடத்தில் (Art Gallery), ‘MEMORIES OF TRAUMAS’ என்னும் மகுடத்தில், கலைஞரும் ஊடகருமான அமரதாஸ் அவர்களால் இலங்கை உள்நாட்டுப் போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட பல ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ருக்சனா அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஒளிப்படக்காட்சி நிகழ்வு 2025-03-10 அன்று முதல் 2025-03-12 வரை நடைபெற்றது.

ஒளிப்படக் கலைஞர் தர்மபாலன் டிலக்சன் அவர்களது ஒளிப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அமரதாஸ் உருவாக்கிய ஒளிப்படங்கள் போர்க்காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் தர்மபாலன் டிலக்சன் உருவாக்கிய ஒளிப்படங்கள் போருக்கும் பிந்தைய காலத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.