தமிழ் மரபுத் திங்கள் 2023 இல் ஒளிப்படக்காட்சி மற்றும் ஒளிப்பட நூல் விநியோகம்

 
கனடா நாட்டில், 2023 ஜனவரி 15 அன்று ‘தமிழ் மரபுத் திங்கள் 2023’ என்னும் பெரு நிகழ்வு நடைபெறவுள்ளது.
 
பல்வேறு அமைப்புகள் இணைந்து, ‘ஒற்றுமையே எங்கள் பலம்’ என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கும் இந்த நிகழ்வானது, கியூபெக் மாகாணத்தில் ‘லவால்’ நகரில் நடைபெறும்.
 
நிகழ்வின் முக்கிய அங்கமாக, இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஒளிப்படங்களைக் கொண்ட ஒளிப்படக்காட்சி Tears of Tamils: Photographs of Amarathaas in Sri Lanka’s war zones என்னும் மகுடத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.
 
அங்கு, Through the Fire Zones: Photographs of Amarathaas in Sri Lanka’s war zones என்னும் பெயரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒளிப்படப் பெருநூலின் பிரதிகள் விநியோகிக்கப்படும். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளே தற்போது கனடா நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 
முகவரி: 𝐋𝐞 𝐂𝐡â𝐭𝐞𝐚𝐮 𝐑𝐨𝐲𝐚𝐥, 𝐋𝐚𝐯𝐚𝐥
𝟑𝟓𝟎𝟎 𝐁𝐨𝐮𝐥𝐞𝐯𝐚𝐫𝐝 𝐝𝐮 𝐒𝐨𝐮𝐯𝐞𝐧𝐢𝐫, 𝐋𝐚𝐯𝐚𝐥, 𝐐𝐂 𝐇𝟕𝐕 𝟏𝐗𝟐
காலம்: 𝐉𝐚𝐧𝐮𝐚𝐫𝐲 𝟏𝟓𝐭𝐡 𝟐𝟎𝟐𝟑 𝐚𝐭 𝟏𝟎𝐚𝐦