கனடா நாட்டில் ஒளிப்படக்காட்சி மற்றும் ஒளிப்பட நூல் விநியோகம்

கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் உள்ள ‘லவால்’ நகரில், 2023 ஜனவரி 15 அன்று ‘தமிழ் மரபுத் திங்கள் 2023’ என்னும் பெரு நிகழ்வு நடைபெற்றது.

பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து, ‘ஒற்றுமையே எங்கள் பலம்’ என்னும் தொனிப்பொருளில் முன்னெடுத்த மேற்படி நிகழ்வின் முக்கிய அம்சமாக, இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் அமரதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வு அமைந்திருந்தது.

Tears of Tamils: Photographs of Amarathaas in Sri Lanka’s war zones என்னும் மகுடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒளிப்படக்காட்சி நிகழ்வின்போது, Through the Fire Zones: Photographs of Amarathaas in Sri Lanka’s war zones என்னும் பெயரில் அண்மையில் வெளிவந்துள்ள ஒளிப்படப் பெருநூலின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.