திரைப்பட விழாவில் (FASHION REIMAGINED & HOME IS THE OCEAN)

‘பூமிக்கான திரைப்படங்கள்’ (FILME FÜR DIE ERDE) திரைப்பட விழாவின் மூன்றாவது நாள் FASHION REIMAGINED என்னும் திரைப்படம் பார்த்தேன். நான்காவது நாளில் (2025-09-17) HOME IS THE OCEAN திரைப்படம் பார்க்க முடிந்தது. பின்னர், இரண்டாம் நாள் பார்த்த REQUIEM IN WEISS திரைப்படத்தின் இயக்குநர் ஹரி புட்ஸ் (Harry Putz) அவர்களைச் சந்திக்க முடிந்தது.

REQUIEM IN WEISS திரைப்படத்தின் இயக்குநர் ஹரி புட்ஸ் (Harry Putz) மற்றும் அமரதாஸ்

ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உள்ள பனிப்பாறைகளின் அழிவைக் குறித்த ஆய்வை, ஹரி புட்ஸ் திரைப்படம் ஆக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள 13 பனிப்பாறைகளுக்குப் பயணித்திருக்கிறார்.

2025-09-18
அமரதாஸ்