சூரிச் திரைப்பட விழாவில் Whispering in the Woods திரைப்படம்

இயக்குநர் வின்சன்ட் முனியர் (Vincent Munier) மற்றும் அமரதாஸ்

சூரிச் திரைப்பட விழாவின் ஏழாம் நாள் (2025-10-01), Whispering in the Woods என்னும் புனைவுசாராத் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது.
தனது தந்தையுடன் வனப்பகுதியிலே பயணித்து, வனத்தின் அழகையும் அங்கிருக்கும் உயிரினங்களையும் பதிவுசெய்து Whispering in the Woods என்னும் திரைப்படம் ஆக்கியிருக்கிறார் வின்சன்ட் முனியர் (Vincent Munier). தனது தந்தையிடமிருந்து கிடைத்த இயற்கை சார்ந்த புரிதல்களை, மகனுக்குக் கடத்த முயல்கிறார். வன விலங்குகளை நெருக்கமாகப் பார்க்கவும் வனத்தின் கிசுகிசுப்புகளைக் கேட்கவும் முடிகிறது.
திரையிடல் முடிந்த பின்னர், இயக்குநர் வின்சன்ட் முனியர் உடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. பிரெஞ்சு மொழியில், அவர் தனது திரைப்படம் குறித்து விரிவாக உரையாடினார்.
2025-10-03
அமரதாஸ்
