சூரிச் திரைப்பட விழாவில் PREDATORS திரைப்படம்

சூரிச் திரைப்பட விழாவின் ஏழாம் நாள் (2025-10-01), PREDATORS என்னும் புனைவுசாராத் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது.

TO CATCH A PREDATOR என்னும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி, முன்னர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை, மறைக்கப்பட்ட கமெராக்கள் மூலம் பதிவுசெய்யும் நிகழ்ச்சி அது. அதைப் பற்றியதாக PREDATORS என்னும் திரைப்படம் அமைந்திருக்கிறது.

திரையிடலின் முடிவில், இயக்குநர் டேவிட் ஒசிட் (David Osit) பங்கேற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.

2025-10-03
அமரதாஸ்